
நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள். சமீபத்தில் 3000 நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று 500 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் அனைவரும் சீமான் தன்னைவிட நாம் தமிழர் கட்சியில் மற்றவர்கள் வளர்வதை விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அதோடு கட்சியில் உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது கிடையாது என்றும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் சமீப காலமாக சீமான் பெரியார் பற்றி சர்ச்சையாக பேசி வருகிறார். அதோடு பிரபாகரனை சந்தித்தது பற்றி சீமான் கூறுவது பொய் என்றும் இயக்குனர் சங்ககிரி ராஜகுமார், ஈழத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் அமரதாஸ் ஆகியோர் கூறியுள்ளனர். தொடர்ந்து சீமான் பற்றி பல சர்ச்சைகள் வெளியாகி கொண்டிருக்கும் சமயத்தில் நிர்வாகிகள் பலரும் அவர் மீது அதிருப்தி தெரிவித்து விலகி வருகிறார்கள்.
இந்நிலையில் இது பற்றி சீமானிடம் செய்தியாளர்களை சந்தித்தபோது நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் என்னைவிட நீ ஏன் வளர வேண்டும் என்று கூறினார். அதாவது யாராவது கட்சி வளரவில்லை என்று பேசுகிறார்களா. தான் வளரவில்லை எனவும் சீமானை விட வளரவில்லை என்றுதான் கூறுகிறார்கள். மேலும் என்னை விட நீ ஏன் வளர வேண்டும் என்று கோபமாக கூறினார்.