உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38 வது தேசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்கியுள்ளது. டேராடூன் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்கும் இந்த தேசிய விளையாட்டு அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறும். 32 பிரிவுகளின் கீழ் நடக்கும் இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த 391 வீரர் வீராங்கனைகள் பங்கேறுகின்றனர்.

இந்த தேசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தம், தடகளம், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, நீச்சல், பேட்மின்டன், கால்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், குத்துச்சண்டை, பழுதூக்குதல் உள்ளிட்ட அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.