ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்சயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியா அணி தங்களின் தொடக்க வீரர்களில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி இந்த போட்டியின் தொடக்க பேட்ஸ்மேனாக அதிரடி ஆட்டக்காரர் டிராவீஸ் ஹெட் களம் இறங்க இருக்கிறார். இதனால் போட்டி ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.