தமிழகத்தில் கடந்த 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. குறிப்பாக ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாகத்தான் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக இன்று சனிக்கிழமை வேலை நாள் என்று அரசு அறிவித்திருந்தது. மேலும் அதன்படி இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்.
