ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தரவரிசை பட்டியலில் பின் தங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களின் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. உலகக்கோப்பை வெற்றிக்கு பின் சர்வதேச டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் அணிகளின் போட்டியில் விளையாடி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டில் ஐசிசி வெளியிட்ட தரவரிசையில் பேட்ஸ்மேன் பட்டியலில் முதலிடத்தை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து மூன்று ஃபார்மட்களிலும் முதல் இடத்தைப் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட தரவரிசையில் 12 ஆண்டுகளுக்குப் பின் முதல் 20 இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்டு விளையாடிய அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் சரிவர விளையாடாதே இதற்கு காரணம் என ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி 22-வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 26 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.