
சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் சின்னாண்டி மடத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக முகைதீன் அப்துல் காதர் என்பவர் செந்திலுக்கு பலக்கமானார். இந்த நிலையில் அப்துல் காதர் வெளிநாட்டு உபகரணங்களை வாங்கி விற்கும் தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
வரும் லாபத்தில் 60 சதவீத பங்கு தருகிறேன் என கூறினார். இதனை நம்பிய செந்தில் ஜிபே மூலம் பல்வேறு தவனைகளாக அப்துல் காதருக்கு 38 லட்சம் ரூபாய் வரை பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பணத்தை கொடுக்காமல் அப்துல் காதர் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து செந்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அப்துல் காதர் அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி மற்றும் நண்பர் தேஜாஸ் ஆகிய 3 மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.