
நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனி காலம் இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை காரணமாக ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது. இதனால் ஊட்டி, காந்தல், தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பணிமோட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து ஒரு வார காலமாக குளிர் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் அவலாஞ்சி, தலைகுந்தா, காந்தல் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் உரை பணி போல நிலவுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ளை கம்பளம் விரித்து இருப்பது போல காணப்படுகிறது. மேலும் பச்சை புல்வெளிகள் மற்றும் வாகனங்களில் பனிப்படலாம் சூழ்ந்துள்ளது. சுற்றுலா பயணிகள் படர்ந்துள்ள பணிகளை கையில் எடுத்து விளையாடி வருகின்றனர்.