சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காய்கறிகளின் விலை சரிவை சந்தித்துள்ளது. பருவமழை தொடங்கிய போது காய்கறிகளின் விலை உயர்ந்த தொடங்கிய நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை சரிவை சந்திக்கிறது. அதன்படி சென்னையில் பூண்டு, முருங்கைக்காய் மற்றும் வெங்காயம் போன்றவைகள் விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் பூண்டு கிலோ 400 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ 280 ரூபாயாக குறைந்துள்ளது.
அதன் பிறகு ஒரு கிலோ வெங்காயம் கடந்த வாரம் 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
