
நாட்டில் 5 லட்சத்திற்கு மேல் மாத வருமானம் ஈடுபவர்கள் வருமான வரி செலுத்துவது கட்டாயம். அந்த வகையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இதன் காரணமாக நாளை முதல் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ரூ.5000 அபராதத்துடன் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்க பட்டிருந்தது.
இந்நிலையில் வருமான வரி செலுத்துபவர்கள் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அதனை ஏற்று கால அவகாசத்தை 14 நாட்கள் வரை நீடித்துள்ளனர். மேலும் இதற்கு மேல் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என்பதால் 14 நாட்களுக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.