
அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் வசிப்பவர் சாரா டார். இவர் அமெரிக்க நாட்டின் மாடல் அழகியாக வலம் வருபவர். இந்த நிலையில் “ஒன்லி ஃபேன்ஸ்”இல் தனக்கென கணக்கு ஒன்றை தொடங்கி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இணையதளத்தில் வைரலான இவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இந்த நிலையில் யூடூப்பில் வீடியோ ஒன்றில் தனது வாழ்க்கை அனுபவங்களை குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, கணினி இன்ஜினியரிங் பட்டப் படிப்பில் பிரபல பல்கலைக்கழகத்தில் பயின்றேன்.
ஒரு காலகட்டத்திற்கு மேல் சூழ்நிலை காரணமாக என்னால் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். பின்னர் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றபோது மாடலிங் துறையில் இணைந்தேன். படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது. ஆனால் இப்போது நான் இந்தத் துறையில் கோடிகளில் சம்பாதித்து கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பல்வேறு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.