அமைச்சர் சிவசங்கர் பாமக கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது அன்புமணி ராமதாசை தலைவர் ஆக்கியது எதற்காக என்ற கேள்வி எழுப்பினார். அதன் பிறகு ஜிகே மணி போன்ற கட்சிக்காக உழைத்த பல தலைவர்கள் இருக்கும் போது அவர்களை எல்லாம் விட்டுவிட்டு அன்புமணி ராமதாசை தலைவர் ஆக்கினார்கள் எனவும் தேர்தல் வரும் சமயத்தில் வன்னியர்களை வைத்து அரசியல் ஆதயம் தேட பாமக முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். அதன் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பாஜக கூட்டணியில் உள்ள பிரதமர் மோடியிடம் சென்று வலியுறுத்த வேண்டியதுதானே என்றார்.

அதோடு பாஜக கூட்டணியிலிருந்து பாமகவால் விலக முடியுமா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தற்போது பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, அண்ணா அறிவாலயத்தில் சுயமரியாதையை அடகு வைத்து அடியால்தான் சிவசங்கர். நாளையே நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற தயார். திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவும் தயார். அதே சமயத்தில் திமுக 15 சதவீத வன்னியர்களுக்கான இட ஒதுக்கிடை தர தயாராக இருக்கிறதா.? மேலும் இப்போது உள்ள தடைகள் பாஜகவில் இருந்து பாமக விலகினால் சரியாகி விடுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.