தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற  பிறகு பெண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான ‌ மாணவிகள் பயன்பெற்று வரும் நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை அரசு ஏற்று தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் என்று அறிவித்துள்ளது. மேலும் அதன்படி இந்த திட்டத்தை வருகிறது 30ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் விரிவாக்கம் செய்ய இருப்பதால் இனி அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பணம் பெற்று பயன்பெறலாம்.