தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் கூட பெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு வங்க கடலிலும் அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வருகிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 1 மணி வரையில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, தென்காசி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.