தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிய நிலையில் இது சென்னை அருகே இருந்தது. இது தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.