பிரேசிலில் டிரக் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் இருந்த 22 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பேருந்தில் மொத்தம் 45 பேர் இருந்த நிலையில் பாலோ நகரில் இருந்து கிளம்பியது.

இந்தப் பேருந்து மினஸ் கெரியாஸ் என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. அப்போது ஒரு டிரக் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.