வயநாடு தொகுதியின் எம்.பி ஆன பிரியங்கா காந்தி பாராளுமன்றத்திற்கு வரும்பொழுது நேற்று முன்தினம் பாலஸ்தீனம் படுகொலை எதிர்ப்பை குறிக்கும் வகையில் கைப்பை அணிந்து வந்தார். இதேபோன்று நேற்று வங்கதேசத்தில் மைனாரிட்டிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அதனை எதிர்க்கும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்த கைப்பையை அணிந்து வந்தார். இந்த நிலையில் பாஜக எம்.பி  அபரஜிதா சாரங்கி, பிரியங்கா காந்திக்கு 1984 என ரத்தத்தால் எழுதப்பட்ட கைப்பையை பரிசாக வழங்கி உள்ளார். 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறிக்கும் வகையில் கைப்பையை வழங்கியதாக அபரஜிதா கூறியுள்ளார்.

இதில் அவர் கூறியதாவது இந்திரா காந்தி படுகொலையை அடுத்து 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் வரலாறு காணாத வன்முறையை நடத்தியதை சுட்டிக்காட்டும் வகையில் அந்தப் பையில் கிராபிக் செய்யப்பட்டிருந்தது. அந்த வன்முறையில் டெல்லியில் 2800 பேரும் நாடு முழுவதும் 3350 பெரும் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்து இருந்தது. இதுபோன்று காங்கிரசின் கடந்த கால வன்முறைகளை வெளிக்கொண்டு வருவதும் முக்கியமானதாகும் என கூறினார்.