
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக மகாராஜா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் ரிலீசான விடுதலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் வருகிற 20-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனால் ப்ரமோஷன் பணிகளில் பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர் விடுதலை 2 படத்தில் நீங்கள் இளமையாக இருக்கும் காட்சிகள் உள்ளது.
அது டீ-ஏஜிங்கா? இல்லை ஏதாவது உணவு கட்டுப்பாடு மேற்கொண்டீர்களா? என கேள்வி கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் நீங்கள் இதை அறிந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. ஒரு படத்தை பார்த்து பிடித்திருக்கிறதா இல்லையா என்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. தோற்றத்திற்கு பின் என்ன தொழில்நுட்பம் இருக்கிறது என்பதெல்லாம் தேவையில்லாதது. அதை அப்படியே விட்டு விடுங்கள் என கூறியுள்ளார்.