வங்காள தேசத்தில் எதிர்க்கட்சிகள் தற்போது இந்தியாவை தாக்கி பேசியது மிகவும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. வங்காளதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த பின் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பின்னர் வங்காளதேசத்தில் இடைக்கால அரசாக முகமது யூனுஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வங்காள தேசத்தில் மைனாரிட்டி தாக்குதல்,  துறவிகள் கைது செய்யப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

இதுகுறித்து இந்தியா மைனாரிட்டிகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கதாகும் என தெரிவித்தது. இதனால் இந்தியாவுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையேயான உறவில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்காள தேசத்தின் எதிர்க்கட்சியான பி.என்.பி கட்சி தலைவர் ராகுல் கபீர் ரிஸ்வி திடீரென இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உற்பத்தி செய்யப்பட்ட போர்வையை எரித்து தங்களது எதிர்ப்பை காட்டினர்.

மேலும் இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்கிறோம் அது எங்கள் நாட்டுக்கு தேவை இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்தியாவுடன் ஆன நட்பு ஷேக் ஹசீனாவுடன் மட்டும்தான் இருக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் சில போர்வைகளை சாலையில் வீசி தனது தொண்டர்களை தீ வைத்து எரிக்க சொன்னார். அதன்படி போர்வையை பி.என்.பி தொண்டர்கள் எரித்தனர். மேலும் அனைவரும் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு கோஷங்களை முழங்கினர்.