
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியாக வலம் வருபவர் டெய்லர் ஸ்விஃப்ட். இவர் தனது 14 வயதிலேயே பல பாடல்கள் எழுதி ஆல்பங்களாக வெளியிட்டுள்ளார். இதனால் இவருக்கு உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் எங்கும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் வகையில், ஒரு நீண்ட இசை சுற்றுலாவை தொடங்கினர். அந்த நீண்ட இசை சுற்றுலாவுக்கு எராஸ் டூர் என பெயரிட்டுள்ளார்.
இந்நிலையில் எராஸ் டூர் சீரிஸ் நிறைவு பெற்றுள்ளது. இதன் கடைசி நிகழ்வு கனடா வான்கூவரில் நடந்தது. தற்போது ட்ரெய்லர் நடத்திய கான்செட் சீரிஸ் 2 பில்லியன் டாலர் அதாவது ரூபாய் 17,000 கோடிக்கும் அதிகமான டிக்கெட் சேல்ஸ் ஆகி உள்ளன. இந்த கான்செட் சீரிசை 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும் இதுவரை இவர் 149 எராஸ் டூர் கான்செட்ஸ் நடத்தி உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.