
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவரை ரசிகர்கள் அன்போடு தல என்று அழைக்கும் நிலையில் தன் பெயருக்கு முன்னால் எந்த ஒரு அடைமொழியும் வேண்டாம் என்று கூறிவிட்டார். அதோடு தன்னை அஜித் என்றோ அல்லது AK என்றோ அழைத்தாலே போதும் என்று கூறினார். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது சமீப காலமாக என்னுடைய பெயரோடு சேர்த்து க… அஜித்தே. (கடவுளே அஜித்தே) என்ற கோஷம் முக்கியமான நிகழ்வுகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் எழுப்பப்படுகிறது.
என்னுடைய பெயருடன் சேர்த்து வேறு எந்த ஒரு முன் பெயர்களும் இணைத்து அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனது பெயரில் மட்டுமே என்னை அழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இப்படி அசோகர்யத்தை ஏற்படுத்தும் வாசகங்களை எழுப்பக் கூடாது. இதன் காரணமாக நான் மிகுந்த வேதனை அடைகிறேன். என்னுடைய வார்த்தைக்கு நீங்கள் உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்களுடைய குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சட்டத்தை மதிக்கும் குடிமகன்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.
வாழு இல்லனா வாழ விடு. இப்படிக்கு அஜித் என்று அந்த அறிக்கை வெளியாகி உள்ளது. மேலும் சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கடவுளே அஜித்தே என்ற கோஷம்எழுகிறது. குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்ற போது சமீபத்தில் டிடிவி தினகரன் கலந்து கொண்ட ஒரு மாரத்தான் போட்டியின் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் என பல்வேறு பொது நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கடவுளை அஜித்தே என்ற கோஷம் எழுப்பப்படுகிறது. மேலும் இதன் காரணமாகத்தான் தற்போது நடிகர் அஜித் இப்படி யாரும் கோஷம் எழுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
From The Desk of AK pic.twitter.com/0W4dspCg26
— Suresh Chandra (@SureshChandraa) December 10, 2024