கேரளாவில் உள்ள மஞ்சேரி விரைவு சிறப்பு நீதிமன்றம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 141 ஆண்டுகள் ஜெயிலில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த நபர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் 17 வயதுடைய வளர்ப்பு மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அச்சத்தில் அந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்தார். அதன் பிறகு தோழியின் ஆலோசனைப்படி தனது தாயிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரைப் பற்றிய வேறு தகவல்கள் தெரியவில்லை. இந்த நிலையில் கேரளா நீதிமன்றம் அவருக்கு 141 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. எப்படி இருந்தாலும் அந்த நபர் 40 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிப்பார். ஏனென்றால் அந்த நபருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனைகளில் அதுவே அதிகபட்ச தண்டனை. மேலும் குற்றவாளிக்கு 7.85 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அந்த தொகையை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.