
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் ரஜினியை சந்தித்ததால் சங்கி ஆர்எஸ்எஸ் என்கிறார்கள். நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து எனக்கு ஆஃபர் வந்தது.
எனக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆஃபர் கொடுப்பதோடு ஆயிரம் கோடி ரூபாய் பணம் மற்றும் குடும்பத்திற்கு தனி செட்டில்மெண்ட் செய்வதாக கூறுகிறார்கள். அதோடு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் என்னை முதல்வராக்க உதவி செய்வதாகவும் கூறுகிறார்கள். ஆனால் நான் பிரபாகரனின் தம்பி என்பதால் அவற்றையெல்லாம் நிராகரித்து வருகிறேன் என்றார். மேலும் தனக்கு ஆயிரம் கோடி ரூபாய் பணம் கொடுத்து அரசியல் கட்சிகள் அழைப்பதாக சீமான் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது