
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்திய கூட்டணி சிவசேனா கட்சியின் நிறுவனர் உத்தவ் தாக்கரே படுதோல்வியை தழுவினார். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் கங்கனா ரணாவத் கூறியதாவது, உத்தவ் தாக்கரேயின் தோல்வி நான் எதிர்பார்த்ததுதான். பெண்களை மரியாதையாக நடத்தாதவர்கள் மேலும் அவர்களை அவமதிப்பவர்கள் அரக்கன் என்றே கூறப்படுவர். அவருக்கு நேர்ந்த தோல்வி அவர் அரக்கத்தனமாக பெண்களிடம் நடந்து கொண்டது தான் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெண்களை அவமதிப்பவர்கள் ஆட்சியில் அமர முடியாது. எனது வீட்டை இடித்து தகாத வார்த்தைகளால் என்னை பேசியவர்கள். பாஜக வளர்ச்சிக்கு வாக்களித்த பொது மக்களுக்கு என் மனம் கனிந்த நன்றி பிரதமர் மோடியின் ஆட்சியே நல்லாட்சி எனக் கூறினார். கடந்த 2020 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி இருந்தபோது, பந்த்ரா மேற்குபகுதியில் கங்கனா ரணாவத் பெரிய வீட்டின் ஒரு பகுதியை அரசு இடத்தில் ஆக்கிரமித்து கட்டி உள்ளதாக இடித்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.