மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு 18 முதல் 21ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். மேலும் இன்று மீனவர்களுக்காக எந்த ஒரு எச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை.