சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி இருக்கிறது. இரவு 11 மணிக்கு அந்த பகுதியில் அலறல் சத்தம் கேட்டது. அதனை கேட்டதும் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களும் காப்பாளர்களும் வெளியே வந்து பார்த்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் எரிந்த நிலையில் கூச்சலிட்டபடி விடுதியை நோக்கி ஓடி வந்துள்ளார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த நபர் விடுதியின் உள்ளே நுழைந்ததும் எரிந்த நிலையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்த நபர் யார்? பூட்டப்பட்டிருந்த பள்ளி வளாகத்திற்குள் அவர் வந்தது எப்படி என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.