சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பாலாஜி என்பவர் பணிபுரிந்து வரும் நிலையில் அவரை நேற்று 25 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதோடு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு 10 வருடங்கள் வரை சிறிதனனை கிடைக்கும் என்று அறிக்கையை பொதுமக்களின் கண்களில் படும்படி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அதன்பிறகு சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை உறுதி செய்வதோடு நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு TAG கைகளில் அணிவது கட்டாயம் இடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது இனி மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு இரவு நேரங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும் அரசு மருத்துவமனைகளில் இனி தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.