பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும், புதுச்சேரியின் முன்னாள் துணை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து பேசினார். இந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர் கூறியதாவது, கொள்கை அடிப்படையில்தான் கூட்டணி சேர வேண்டும் என்பது தவறான கருத்து. பாஜக கட்சியுடன் இணைந்து பல கட்சிகள் கூட்டணி அமைக்கலாம். திமுக ஆட்சியில் இருந்து கூட பிரிந்து வந்து எதிரணியில் இணையலாம்.

இது கட்சியின் தனிப்பட்ட முடிவாகும். கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்க அவசியம் இல்லை. இதற்கு 1967 லே சரித்திரம் உள்ளது. அனைத்து கட்சிகளும் ஒரு கட்சியை எதிர்க்கும் வகையில் கூட்டணி அமைப்பதில் தவறில்லை. அனைத்துக் கட்சிகளும் உதிரிகளாக இருப்பதனால் தான் உதயசூரியன் உதிக்கிறது. 2026ல் உதிரியாக இல்லாமல் இருக்க வழி வகை செய்வோம். இவ்வாறு தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.