
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் மாதம்தோறும் 15 ஆம் தேதி பெண்கள் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில் பலர் தங்களுக்கு திட்டத்தின் மூலம் பயன் கிடைப்பதில்லை என்று புகார் தெரிவிக்கிறார்கள். இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததால் திட்டத்தை மேலும் விரிவடைய செய்யவும், கூடுதலாக பெண்களை திட்டத்தில் சேர்க்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகையில் விடுபட்டவர்கள், அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள், புதியதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆகியோரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் ஜனவரி மாதம் 2025 ஆம் ஆண்டு முதல் இனி தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் தகுதி இருந்தாலும் பல பெண்களுக்கு இதில் பலன் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்ததால் தற்போது ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.