
சிம்பு நடித்த வானம் திரைப்படத்தை இயக்கியவர் கிரிஷ்(46). இவர் தமிழ் தெலுங்கு மொழி திரைப்படங்களை இயக்கி பிரபலமானார். கடந்த 2016 ஆம் ஆண்டு ரம்யா என்ற பெண்ணை கிரிஷ் திருமணம் செய்தார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்த நிலையில் சிங்கிளாக வலம் வந்த கிரிஷ் ப்ரீத்தி செல்லா என்ற மருத்துவரை ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. அந்தப் பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனது. அவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். கிரிஷ்க்கு 46 வயது. திருமண போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதில் உங்களுக்கு இப்படி ஒரு பெண் கிடைச்சிருக்கா என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர் பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான் என்றெல்லாம் கலாய்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.