வயதான காலங்களில் ஓய்வுக்கு பிந்தைய ஆண்டுகளில் நிலையான வருமானம் நிலையான இடைவெளியில் வழங்கப்படும் தொகையாகும். இதற்காக மத்திய அரசு பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் மிக முக்கியமானது அடல் பென்ஷன் யோஜனா (APY) ஆகும். இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 60 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் நிலையான மாத வருமானத்தை பெற உதவுகிறது. இது அரசுச்சாரா தொழிலாளர்களுக்கு முதன்மையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடல் பென்ஷன் யோஜனாவில் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட இந்திய குடிமக்கள் முதலீடு செய்யலாம்.

இதில் முதலீடு செய்பவர்கள் மாதந்தோறும் ரூபாய் 76 முதல் சேமிக்கலாம். கால் இறுதி ஆண்டுக்கு ரூபாய் 226, அரை இறுதி ஆண்டுக்கு ரூபாய் 449 செலுத்தி சேமிக்கலாம். இதில் முதலீடு செய்து 60 வயது நிரம்பிய நபராக இருந்தால் அவருக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 முதல் ரூபாய் 5000 வரை ஓய்வூதியம் வழங்க தகுதி உடையவராக அறிவிக்கப்படுவார். இந்த பென்ஷன் யோஜனாவில் சேர விரும்புவோர் முக்கியமாக தனி வங்கி கணக்கு அல்லது தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பது முக்கியமானதாகும்.