விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் ரசிகர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய விஜய் மக்கள் நலன் குறித்து பேசினார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். விஜயின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு ரஜினி அரசியலுக்கு வராததால் பாஜக தான் விஜய் இறக்கியிருக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது. விஜய் மற்றவர்களை குறை சொல்லும் போது தான் உண்மையாக இருக்க வேண்டும். வருமான வரி சோதனையில் சிக்கிய போது விஜய்க்கு ஆதரவாக திமுக தான் குரல் கொடுத்தது என பேசியுள்ளார். அதனை பார்த்த விஜய் ரசிகர்கள் விஜய் வருமான வரி சரியாக செலுத்தி தன் மீது தவறு இல்லை என்பதை நிரூபித்து விட்டார் என கூறி விஜய் ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.