
தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்தார். அதாவது தீபாவளி பண்டிகையின் போது பொது மக்களுக்கு ரேஷன் கடைகளில் தங்கு தடை இன்றி பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த நாளில் பணியாளர்கள் வேலை செய்வதற்கு ஈடாக அவர்களுக்கு வேறொரு நாளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 16ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக அன்றைய தினம் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.