தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசும் தங்கள் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸை வழங்குவதாக அறிவித்துள்ளது.
புதுச்சேரியில், தீபாவளியை முன்னிட்டு மக்கள் மளிகைப் பொருட்கள், புத்தாடைகள், மற்றும் பட்டாசுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முக்கியமாக, முக்கிய வீதிகள் மற்றும் கடைகள் கூட்டமாக நிரம்பியுள்ளது
புதுச்சேரி கட்டடத் தொழிலாளர்களுக்கும் சிறப்பான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500 போனஸும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
