
சென்னையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூறியது தொடர்பாக விமர்சித்தார். இது குறித்து முதல்வர் பேசியதாவது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி என்றால் அது திமுக தான். மக்களால் ஓரங்ட்டப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி திமுக வளர்கிறதே மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு உயர்கிறதே என்ற பொறாமையில் அப்படி பேசுகிறார். அதனால்தான் திமுக கூட்டணியில் விரிச்சல் ஏற்பட்டது என்று ஜோசியக்காரர் போல் கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி விரக்தி நிலைக்கு சென்றுவிட்டார்.
தன்னுடைய காட்சியை வளர்க்க முடியாதவர் இன்று அடுத்த கட்சியின் கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்று பக்கத்து வீட்டில் தகராறு நடப்பதை வேடிக்கை பார்க்க காத்திருப்பதை போல் காத்துக் கொண்டிருக்கிறார் என்றார். அதன் பிறகு சென்னையில் மழை வந்தவுடன் சேலத்திற்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி ஓடி ஒளிந்துவிட்டார். அவர் ஆட்சியில் இருந்தாலும் வெள்ள பாதிப்புகளை பார்க்க வரமாட்டார். ஆட்சியில் இல்லாவிட்டாலும் வெள்ள பாதிப்புகளை பார்க்க வரமாட்டார் என்று கூறினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக கூறியதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்ததோடு அவர்தான் பகல் கனவு காண்கிறார் என்று விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.