தமிழக ஆளுநர் மாளிகையில் நேற்று டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்ட நிலையில் விழா இறுதியில் கடைசியில் தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. அப்போது தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தையை மட்டும் விட்டுவிட்டு தமிழ் தாய் வாழ்த்தை ஒலிபரப்பினர். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் தமிழகத்தையும் தமிழக மக்களையும் ஆளுநர் அவமதித்துவிட்டதாக திமுகவினர் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரும் கண்டனங்களை தெரிவித்தனர். ஆனால் ஆளுநர் மாளிகை இந்த சம்பவத்திற்கும் ஆளுநருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது பாடல் ஒலிபரப்பப்பட்டவுடன் விழா ஏற்பாட்டாளர்களிடம் இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியது. இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியினர் தமிழ்த்தாய் வாழ்த்தில் தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழர் நல் திருநாடும் என்ற வார்த்தையை சேர்த்து தமிழ் தாய் வாழ்த்தினை இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்ட போது அதில் திராவிட என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தமிழர் என்ற வார்த்தையை சேர்த்துள்ளனர். மேலும் இது குறித்தான வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.