இன்றைய காலகட்டத்தில் வங்கி என்பது மிக முக்கியமான ஒரு பயன்பாடாக இருக்கும் நிலையில் தினசரி வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் என்பது இருக்கத்தான் செய்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து விட்ட நிலையிலும் வங்கிகளுக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணத்திற்காக செல்ல நேரிடும். பணம் சேமிப்பு மற்றும் முதலீடு போன்றவைகளுக்கு வங்கி பாதுகாப்பானதாக திகழ்கிறது. இதனால் நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார்கள். இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை க்யூ ஆர் code ஸ்கேன் மூலம் பணம் பரிமாற்றம் நடைபெறுகிறது. இந்நிலையில் பண பரிவர்த்தனையில் தற்போது புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் மூலம் பேங்க் அக்கவுண்ட் நம்பர், பேங்க் கிளை மற்றும் மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் மட்டுமின்றி இன்னும்  சில  கூடுதல் விவரங்களும் சேகரிக்கப்படும். அதோடு வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரி போன்றவைகளும் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மூலம் சேகரிக்கப்படும். அதுபோக ஆதார் கார்டு வெரிஃபிகேஷன் மற்றும் பிங்கர் பிரிண்ட் வெரிஃபிகேஷன் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் கொண்டுவரப்பட உள்ளது. எனவே இனி பேங்க் மூலம் பணம் அனுப்பும்போது இனி ஆதார் கார்டு வெரிஃபிகேஷன் அல்லது பிங்கர் பிரிண்ட் போன்றவைகள் கேட்கப்படலாம். மேலும் வங்கிகளில் இன்னும் சில புதிய விதிமுறைகள் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.