சென்னை மாநகராட்சி, பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது, தொழிற்சாலை கழிவுகள், கட்டிடக்கழிவுகள் போன்ற குப்பைகளை பொதுவெளிகளில் போடுவதால் தற்போது புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஏற்கனவே இது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தினமும் சென்னை மாநகராட்சியில் உள்ள பொதுவெளிகளில் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஒரு நாளில் மட்டும் சென்னையில் 7 மில்லியன் ஆயிரம் டன் குப்பைகளை அப்புறப்படுத்துவதாக அறிவித்தது.

பொதுவெளிகளில் குப்பை போடுபவருக்கு ரூபாய் 500 ஆக இருந்த அபராதம் ரூபாய் 5000 ஆக உயர்த்தியது. தனியார் வீடுகளில் குப்பைகளை போடுபவருக்கு ரூபாய் 100 ஆக இருந்த அபதாரம் ரூபாய் 1000 ஆக உயர்த்தியது. இதில் கடந்த 10 நாட்களில் விதிகளை மீறியவர்களுக்கு ரூபாய் 2.5 லட்சம் அபராதம் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து மாநகராட்சி தற்போது ஒவ்வொரு பொது இடங்களிலும் குப்பைகளை போடுபவர்களை கண்டறிய புதிய டிஜிட்டல் கருவிகளை இறக்குமதி செய்துள்ளது.

இந்த கருவிகள் மூலம் பொதுவெளிகளில் குப்பைகளை போடுபவரை உடனே கண்டறிந்து அபராதம் அளிக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளில் முதலாவதாக 500 கருவிகள் மாநகராட்சி இறக்குமதி செய்துள்ளதாகவும், இதனை இன்னும் இரண்டு நாட்களுக்குள் 15 மண்டலங்களில் உள்ள பகுதிகளில் பொருத்த உள்ளது எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனை கூடிய விரைவில் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த உள்ளது.