
ஈரோடு மாவட்டம் வள்ளுவர் வீதியைச் சேர்ந்த 32 வயதான அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி திடீரென உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அணு பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், அப்துல் ரகுமான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அப்துல் ரகுமானை ஈரோடு கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இது சம்பந்தமாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.