
இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு மிகவும் அவசியம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால்(UIDAI) ஆதார் கார்டு மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆதார் கார்டில் பல நபர்களுக்கு பிழைகள் ஏற்படுகிறது. அந்த பிளைகளை சரி செய்தால் எத்தனை நாட்களுக்குள் ஆதார் கார்டில் அது புதுப்பிக்கப்படும் என்பது தெரியுமா?
ஆதார் அட்டையை ஆன்லைன் மூலம் புதுப்பிக்கின்றனர். அப்போது ஒரு சில விவரங்களை மட்டுமே புதுப்பிக்க முடியும். ஆனால் பயோமெட்ரிக் விவரங்களை அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு சென்று தான் புதுப்பிக்க முடியும். புதுப்பித்த விவரங்கள் ஆதார் கார்டில் பிரதிபலிக்க குறைந்தது 30 நாட்கள் ஆகும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.