இன்றைய கால கட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அதிகம் பேர் நட்பாக பழகி வருகின்றன அதே வேளையில் சமூக வலைதளங்களில் அதிக மோசடியும் நடைபெற்றுக் வருகிறது. அந்த வகையில் சமூக வலைதளத்தால் கிடைத்த நண்பர்களின் தொடர்புகளால் பணத்தை இழந்ததாக டெல்லியில் வசித்து வரும் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் சமூக வலைதளம் மூலமாக, வினய், நவீன், ரோஹித் மற்றும் ஆகாஷ் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இவர்கள் ஹிப்னாடிசம் செய்து என்னிடமிருந்து 98,000 ரூபாய் பணத்தை ஏமாற்றி பறித்து விட்டனர். இவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு தன் புகாரில் தெரிவித்துள்ளார் மேலும் அந்த புகாரின்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தற்போது 4 பேரையும் கைது செய்துள்ளனர்.