
தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது கடைகளுக்கும் அரசாங்கம் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்தில் யாராவது சட்டவிரோதமாக மதுவை விற்பனை செய்தாலோ அல்லது வாங்கினாலோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நாளை அனைத்து விதமான டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்ட நிலையில் கள்ளச்சந்தையில் மதுவை விற்பனை செய்வது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.