
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் முழுமையான அர்ப்பணிப்புடன் நடிப்பார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இயக்குநர் த.செ.ஞானவேல், தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ரஜினிகாந்தின் இந்த குணத்தைப் பற்றி மிகவும் சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார்
“படத்தில் என்னவாக வரப்போகிறோம் என்பதை ரஜினி சார் சரியாகப் புரிந்துகொள்வார். அவருக்கு திடீரென்று ஏதேனும் சந்தேகம் வந்தால் அவரிடமிருந்து காலை 5 மணிக்கு எழுந்து பார்த்தால் வாய்ஸ் நோட் வந்திருக்கும். ‘இந்த சீன் இப்படி இருக்கு. இப்படியும் இருக்கலாமா?’ன்னு பேசியிருப்பார். அதாவது பள்ளிகளில் சில மாணவர்கள் கீழ்ப்படிந்து இருப்பார்கள். அதே போல தான் இவரும் டைரக்டருக்கு கீழ்ப்படிந்து இருப்பார்.” என்று த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார்.
இந்த வார்த்தைகள் ரஜினிகாந் தனது இயக்குனர்களை ஆசிரியர் போல் பாவிப்பதாகவும், அனுபவமிக்க நடிகராக இருந்தாலும், தன்னை மேம்படுத்திக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு எப்போதும் இருந்து வருவதாகவும், இயக்குநரின் கருத்தை மதித்து, அதை மேலும் ஆழமாக ஆராய்ந்து, படத்திற்கு என்ன நல்லது என்பதைப் பற்றி சிந்திக்கும் திறன் கொண்டவர் ரஜினிகாந்த். இதுவே அவர் இத்தனை ஆண்டுகள் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்திருக்க காரணமாக இருக்கலாம் எனவும் சினிமா வட்டாரங்களில் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றன.