சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அவர் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அவதூறாக பேசினார். இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மாற்றித் திறனாளிகள் குறித்து தான் பேசிய கருத்து தவறாக இருப்பின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இதனால் காவல்துறையினர் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு முன்னதாக தான் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியதில் தவறு இல்லை எனவும் சிறையிலும் கைதிகளுக்கும் அதே போன்று அவர்களின் நல்வழிப்படுத்த சொற்பொழிவு ஆற்றுவேன் என்றும் மகாவிஷ்ணு கூறிய நிலையில் தற்போது மன்னிப்பு கேட்பேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
