சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு இன்று சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவருக்கு தலா 25 லட்சம் இரு நபர் பிணைத்தொகையுடன் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றம் அந்த தொகையை ‌ வாங்க மறுத்தது. அதாவது அமலாக்கத்துறை அதிகாரி முன்பாக பினைத்தொகையை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகளை அறிவுறுத்திய நிலையில் அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் அவர் விடுதலையாவதில் திடீரென சிக்கல் ஏற்பட்ட நிலையில் தற்போது சென்னை அமர்வு நீதிமன்றம் பிணைத்தொகையை ஏற்க ஒப்புக்கொண்டது. அதாவது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி விடுதலைக்கு சம்மதம் தெரிவித்தததால்சென்னை அமர்வு நீதிமன்றம் பிணைத்தொகையை வாங்க சமாதித்தது. இந்நிலையில் இரு நபர் பிணைத்தொகையை சென்னை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் புழல் சிறையில் இருந்து தற்போது அவர்  விடுதலை ஆகியுள்ளார். மேலும் அவருடைய ஆதரவாளர்கள் சிறைக்கு வெளியே காத்திருந்த நிலையில் செந்தில் பாலாஜியை மிகவும் உற்சாகமாக வரவேற்றனர்.