உலக அளவில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக இருப்பதே திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில். இந்த கோவிலில் வழங்கப்படும் லட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் வழங்கப்பட்ட லட்டுவில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி என்பது நெய்க்கு பதில் மாட்டு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்ற சாட்டினை முன் வைத்திருந்தார். இது தொடர்பாக பிரபல டிவி ஒன்று ஆய்வு நடத்திய நிலையில் லட்டுவில் விலங்கின் கொழுப்பு இருப்பதாக கூறினார். இந்நிலையில் லட்டுவை ஆய்வுக்கு அனுப்பிய நிலையில் அதன் ரிப்போர்ட்டை தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் பிரமுகரான வெங்கடா ரமணா ரெட்டி என்பவர் வெளியிட்டுள்ளார்.

அந்த ரிப்போர்ட்டின் படி மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் போன்றவைகள் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுபோக சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய், ஆலிவ் மற்றும் பல காய்கறிகளின் கொழுப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது. அதோடு தேங்காய், பாமாயில் மற்றும், மாட்டு கொழுப்பு மற்றும் பிற விலங்குகளின் கொழுப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆய்வை National dairy development board செய்துள்ளது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தானம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.