மத்திய பிரதேஷ் போபால் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவரது தாய் சிறுமியின் அந்தரங்க பாகங்களில் காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்துள்ளார். இது குறித்து குழந்தையிடம் விசாரித்ததில் பள்ளியில் உள்ள காசிம் என்ற ஆசிரியர் தான் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற தாய் ஆசிரியர் மீது குற்றம் சாட்டிய நிலையில் பள்ளி தரப்பில் எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை. இதனால் சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மூன்று வயது சிறுமிக்கு ஆசிரியர் செய்த இத்தகைய கொடுமை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.