
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 வரை அதிகரித்து ஒரு சவரன் 54 ஆயிரத்து 920 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதன் பிறகு ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 40 வரையில் அதிகரித்து 6865 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதே போன்று வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 97 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 97 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.