தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கிடைக்கிறது. குறிப்பாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சிகாகோவில் வட அமெரிக்கா தமிழ் சங்க கலை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பட்டு வேஷ்டி சட்டையில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதேபோன்று முன்னதாக ‌ விமான நிலையத்திலும் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பை கேள்விப்பட்டு மிகவும் ஆச்சரியப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் அமெரிக்காவில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.