
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் சிமி சிங். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 37 வயது ஆகும் நிலையில் கல்லீரல் செயல் இழந்ததால் உயிருக்கு போராடுகிறார். இவர் ஹரியானா மாநிலம் குரு கிராம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பதால் மாற்றுக் கல்லீரல் கிடைத்து ஆபரேஷன் செய்தால்தான் உயிர் பிழைக்கும் நிலை இருக்கிறது.
மெகாலியைச் சேர்ந்த இவர் பஞ்சாப்புக்காக U-14, U-17 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் அயர்லாந்து அணிக்காக 35 ஒருநாள் போட்டிகள் மற்றும் 53 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் தற்போது கல்லீரல் பாதிப்பினால் சிமி சிங் உயிருக்கு போராடி வருவது ரசிகர்கள் மத்தியிலும் கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.