
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி எந்த வங்கியில் வேண்டுமானாலும் ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிக்கு மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியதாரர்கள் இனி எந்த வங்கியில் வேண்டுமானாலும் பென்ஷன் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது.
இதற்கு முன்னதாக இபிஎஃப்ஓ அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட சில குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும்தான் ஓய்வூதிய பணத்தை எடுக்க முடியும். ஒருவேளை ஊர் மாறி சென்றாலும் மீண்டும் அதே வங்கிக்கு வரவேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக இனி ஓய்வூதிய பணத்தை எந்த வங்கிகளில் வேண்டுமானாலும் பென்ஷன் தாரர்கள் எடுத்துக் கொள்ளலாம்.